Afghanistan vs Australia: ஒரேயொரு கேட்ச்சால் கோட்டை விட்ட ஆப்கானிஸ்தான்; கை நழுவி போன வெற்றி வாய்ப்பு!

கிளென் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டதால், ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளது.

Afghanistan Captain Hashmatullah Shahidi Gives Explanation about loss against Australia and Glenn Maxwell brilliant Performance rsk

மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 39ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்ந்து 291 ரன்கள் குவித்தது. இதில், இப்ராஹிம் ஜத்ரன் அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் முன்வரிசை வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

AFG vs AUS:என்னா அடி: நான் பார்த்த மிகப்பெரிய இன்னிங்ஸ் – மேக்ஸ்வெல்லிற்கு பாகுபலி பட இயக்குநர் வாழ்த்து!

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திடும் என்று நினைக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், அதையெல்லாம் தலைகீழாக்கி கிளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்துள்ளார். போட்டிக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிடி கூறியிருப்பதாவது: கிரிக்கெட் நகைச்சுவையான விளையாட்டு. அது ஏமாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும்.

உலகக் கோப்பையில் கபில் தேவ் 175 ரன்கள் சாதனையை முறியடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை!

ஆனால், கிளென் மேக்ஸ்வெல் விளையாடியதை எங்களால் நம்பவே முடியவில்லை. போட்டியில் எங்களது ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தோம். ஆனால், ஒரு கேட்ச்சை கோட்டைவிட்டதால் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் என்னென்ன ஷாட்டுகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் அவர் அடித்துவிட்டார். அந்த ஒரு கேட்ச் மட்டும் நாங்கள் பிடித்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எனினும் நாங்கள் விளையாடியதை நினைத்து பெருமை கொள்கிறோம். போட்டி இப்படித்தான் போகும் என்று நினைக்கவேயில்லை. கடைசியாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை – 21 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உடன் 201 நாட் அவுட்!

வரும் 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 42ஆவது லீக் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்கள், விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேலும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தோல்வி அடைய வேண்டும். ஆனால், 3 அணிகளும் தோல்வியை தழுவினால், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முன்னிலையில் இருக்கும் நிலையில், நியூசிலாந்து தான் அரையிறுதிக்கு முன்னேறும்.

ருத்ரதாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 201 நாட் அவுட் – வரலாற்று சாதனையோடு அரையிறுதிக்கு முன்னேற்றம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios