அதே டீம், அதே மைதானம்; வெற்றி யாருக்கு?
இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் ஆடுகிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதே போன்று தான் அயர்லாந்து அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ரோகித் சர்மா: ஆசிய கோப்பைக்கு யார் யாருக்கு வாய்ப்பு?
இந்தியா:
ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னாய்.
அயர்லாந்து:
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பல்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.