செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ரோகித் சர்மா: ஆசிய கோப்பைக்கு யார் யாருக்கு வாய்ப்பு?
ஆசியக் கோப்பைக்கான தேர்வுக்குழு மீட்டிங் நாளை நடக்க உள்ள நிலையில், அதில் ரோகித் சர்மா கலந்து கொள்ள இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரைத் தொடர்ந்து ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதற்கான தேர்வுக் குழு மீட்டிங் நாளை நடக்கிறது. இதில், அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹர்தி பாண்ட்யா ஆகியோர் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்களில் வெற்றி பெற்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ஃபர்ஸ்ட் போட்டியில் வெற்றி; 2ஆவது போட்டிக்கு தயாராகும் டீம் இந்தியா!