IPL Mini Auction 2023: விடா முயற்சியுடன் நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு தட்டி தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்தில் ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.
 

ipl mini auction 2023 lucknow super giants picks nicholas pooran for rs 16 crores

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்து  ஆல்ரவுண்டர் சாம் கரனை அதிகபட்சமாக ரூ.18.5 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. அவரை எடுக்க முயன்று முடியாமல் போன சிஎஸ்கே அணி, சீனியர் ஆல்ரவுண்டரும் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு எடுத்தது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச தொகையை கொடுத்து பென் ஸ்டோக்ஸை எடுத்த சிஎஸ்கே

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன் மீது ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டியது. ஆனால் ரூ.16.25 கோடிக்கு ஸ்டோக்ஸையும், ரூ.50 லட்சத்திற்கு ரஹானேவையும் எடுத்துவிட்டதால், கையில் மூன்றரை கோடி மட்டுமே மீதம் இருந்ததால் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே.

டெல்லி கேபிடள்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பூரனுக்காக போட்டி போட்டன. இரு அணிகளும் கடுமையாக போட்டி போட, பூரனின் விலை எகிறியது. கடைசி வரை விட்டுக்கொடுக்காத லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது.

IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாம் கரன்..! வரலாற்று சாதனை

நிகோலஸ் பூரன் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இருந்தாலும் அபாரமான ஃபீல்டரும் கூட. காட்டடி அடித்து மிரட்டக்கூடிய பேட்ஸ்மேன். நிலையான, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தான் அவரது பிரச்னை. ஆனால் அடிக்க ஆரம்பித்துவிட்டால், மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய வீரர் பூரன். அந்தவகையில், அவரை பெரும் தொகை கொடுத்து எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios