IND vs SL: ஒரேயொரு சிக்ஸர் அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா: அதிவேகமாக 10000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர்!

இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் ரோகித் சர்மா 10000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Indian Skipper Rohit Sharma becomes the 2nd fastest Indian to reach 10,000 runs in ODI ODI rsk

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 4ஆவது போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷர்துல் தாக்கூர் நீக்கம், அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு:இலங்கைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோகித் சர்மா; இந்தியா பேட்டிங்!

இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவருமே நிதானமாகவே ரன்கள் சேர்த்தனர். ஆனால், சுப்மன் கில் மட்டுமே 25 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 80 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த விராட் கோலி அடுத்த 10 ரன்களில் இந்திய அணி சேர்த்த நிலையில் 3 ரன்களில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Pakistan vs Sri Lanka: சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வீரர்களான ஹரிஷ் ராஃப், நசீம் ஷா விளையாட வாய்ப்பில்லை?

இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டியில் தனது 51ஆவது அரைசதத்தை பூர்த்தி  செய்தார். அதுமட்டுமின்றி, ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். நேபாள் அணிக்கு எதிராக 59 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார். நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

IND vs SL: சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!

அதோடு, இந்தப் போட்டியின் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மா 17 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 241 இன்னிங்ஸில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

 

 

இதற்கு முன்னதாக அதிவேகமாக 10000 ரன்கள் கடந்தவர்கள் பட்டியல்:

204 இன்னிங்ஸ் – விராட் கோலி

241 இன்னிங்ஸ் – ரோகித் சர்மா

259 இன்னிங்ஸ் – சச்சின் டெண்டுல்கர்

266 இன்னிங்ஸ் – ரிக்கி பாண்டிங்

மேலும், 82 இன்னிங்ஸ் விளையாடி 2000 ரன்களை கடந்த 3ஆவது இந்தியர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். ஆனால், என்ன, மெதுவாக 2000 ரன்களை கடந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி: பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:

மேலும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் 2 சிக்ஸர் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா ஆசிய கோப்பை போட்டிகளில் 28 சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 26 சிக்ஸர், இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா 23, இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 18 சிக்ஸர்கள் என்று அடித்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

Pakistan vs India Super Fours 3rd Match: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் இந்தியா சாதனை வெற்றி!

ரோகித் சர்மா சாதனை பட்டியல்:

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் தொடர்ந்து 3ஆவது அரைசதம் அடித்துள்ளார். (74*, 56, 53).

ஒரு கேப்டனாக ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ளார்.

2013 – மெதுவாக அதுவும் 82 இன்னிங்ஸ் விளையாடி 2000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

2023 – அதிவேகமாக 10000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை இன்று படைத்துள்ளார்.

ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக இணைந்து ஒரு நாள் போட்டியில் 1000 ரன்களை கடந்துள்ளனர்.

தொடக்க வீரராக அதிவேகமாக 8000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆசிய கோப்பையில் 10 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios