Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி: பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

fans celebrating Indias victory in Asia Cup 2023 Super 4 Match against Pakistan at Jammu rsk
Author
First Published Sep 12, 2023, 10:16 AM IST

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டி நேற்று நடந்தது. கடந்த 10 ஆம் தேதி கொழும்புவில் தொடங்கிய இந்தப் போட்டி மழையால் ரிசர்வ் டே என்று நேற்று நடந்தது. பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், ரோகித் சர்மா 56 ரன்னிலும், சுப்மன் கில் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Pakistan vs India Super Fours 3rd Match: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் இந்தியா சாதனை வெற்றி!

முதல் நாளில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 8 ரன்னிலும், கேஎல் ராகுல் 17 ரன்னிலும் விளையாடி வந்தனர். இதையடுத்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இதையடுத்து கேஎல் ராகுல் ஒரு நாள் போட்டியில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 100 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதே போன்று விராட் கோலியும் தனது 47ஆவது ஒருநாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். அதோடு, ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 13000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

PAK vs IND: நாங்க தான் கெத்துன்னு ஆட்டம் போட்ட பாகிஸ்தான்; குல்தீப் சுழலில் மொத்தமா சரண்டர்: இந்திய வெற்றி!

இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. இது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் விராட் கோலி 122* ரன்னும், கேஎல் ராகுல் 111* ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடியது. எனினும் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது.

PAK vs IND:ஜடேஜா பந்தில் முகத்தில் அடி வாங்கிய அகா சல்மான்: ரத்தம் வந்ததைப் பார்த்து பாக், வீரர்கள் அதிர்ச்சி!

இமாம் உல் ஹாக் 9 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் 2 ரன்களில் வெளியேற, ஃபஹர் ஜமாம் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அகா சல்மான் 23 ரன்னிலும், இப்திகார் அகமது 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக பாகிஸ்தான் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இந்திய அணி அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இருண்ட இரவு கூட முடிந்து சூரியன் உதிக்கும்; நீங்கள் தான் எல்லாம் – ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்த அதியா ஷெட்டி!

இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். அதில் ஜம்முவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை பறக்கவிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

India vs Pakistan: வேலையை காட்டிய மழை; என்ன சோனமுத்தா போச்சா…. இப்போ மழையா? யாருக்கு சாதகம்?

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios