பும்ரா ஏன் சிறந்த பவுலர் தெரியுமா? 383 பந்துகளில் 268 பந்துகள் ரன்னே கொடுக்கவில்லை!
2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய 383 பந்துகளில் 268 பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்காமல் டாட் பந்துகளாக வீசியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும், 8 நாட்களில் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும் நிலையில், அதற்கான போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், கிட்டத்தட்ட நியூசிலாந்து அணியும் போட்டி போடுகின்றன.
ஆப்கானிஸ்தான் வெளியேறிவிட்டது; பாகிஸ்தானுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு: அரையிறுதிக்கு முன்னேறுமா?
இந்தியா விளையாடிய 8 போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இதுவரையில் 383 பந்துகள் வீசியுள்ளார். இதில், 268 பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. 5 ஓவர்கள் மெய்டனாகவும் வீசியுள்ளார். எஞ்சிய 115 பந்துகளில் பும்ரா 21 பவுண்டரியும், 5 சிக்ஸர்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இதில், 15 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 233 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.
அதோடு ஒருமுறை மட்டுமே 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில், சிறந்த பந்து வீச்சாக 4/39 என்பது ஆகும். ஆனால், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 363 பந்துகள் வீசி 5 மெய்டன் உள்பட 317 ரன்கள் கொடுத்துள்ளார். இதில், 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சாக 3/16 என்பது உள்ளது. ஆனால், முகமது ஷமி விளையாடிய 4 போட்டிகளில் மொத்தமாக 156 பந்துகள் வீசியுள்ளார். இதில், 3 மெய்டன் உள்பட 112 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
வான் டெர் டுசென், ஆண்டிலேயால் தென் ஆப்பிரிக்கா சிம்பிள் வெற்றி – பரிதாபமாக வெளியேறிய ஆப்கானிஸ்தான்!
மேலும், ஒரு முறை 4 விக்கெட்டுகளும், 2 முறை 5 விக்கெட்டுகளும் கைப்பற்றீ சாதனை படைத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாக 5/18 என்பதே உள்ளது. ரவீந்திர ஜடேஜாவும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த தொடரில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
CWC 2023 and Diwali: தீபாவளி கொண்டாட்டம்: உலகக் கோப்பைக்காக ஜொலிக்கும் கேட்வே ஆஃப் இந்தியா!