உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடக்க இருக்கும் நிலையில், தீபாவளி கொண்டாட்டமாக மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா ஆனது ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை தொடரில் வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் வெளியேறிவிட்டன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. கடைசி இடத்திற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் இடம் பெற்றிருந்தன.

Sri Lanka Cricket Board: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!

இந்த நிலையில், அகமதாபாத்தில் நடந்த 42ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக அஸ்மதுல்லா உமர்சாய் 97 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்!

Scroll to load tweet…

இதில், தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரஸ்ஸி வான் டெர் டுசென் அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார். குயீண்டன் டி காக் 41 ரன்கள் எடுத்தார். கடைசியாக தென் ஆப்பிரிக்கா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்றது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

Afghanistan vs South Africa: 3 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 244 ரன்கள் குவிப்பு!

இந்த நிலையில், தான் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை சுட்டிக் காட்டும் வகையிலும் தீபாவளி கொண்டாட்டமாக மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா ஆனது மின்னொளியால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், உலகக் கோப்பை தீம் மியூசிக் இடம் பெற்றுள்ளது. மேலும், அரையிறுதி போட்டிக்கான அணிகள், விராட் கோலி, குயீண்டன் டி காக், ரோகித் சர்மா, பேட் கம்மின்ஸ், டெம்பா பவுமா, கேன் வில்லியம்சன் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் பலரும் வியப்பாக பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பும்ராவை ஓரங்கட்டி ரச்சின் ரவீந்திராவுக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கிய ஐசிசி!

Scroll to load tweet…