வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த தொடர்களில் எல்லாம் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது என்று வரலாறு சொல்கிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸில் 2 நாள் பயிற்சி போட்டியிலும் விளையாடியுள்ளனர். இதில் சட்டீஸ்வர் புஜாரா இடம் பெறவில்லை. முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்தியா, பாகிஸ்தான் செய்யாத சாதனை; வங்கதேசத்தில் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தான் இதுவரையில் கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நடந்த தொடர்களில் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2002, 2006, 2011, 2013, 2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. எனினும், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.