டி20 உலக கோப்பை: நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் தரமான முடிவு
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அரையிறுதிக்கான 4 அணிகளை முடிவு செய்யும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக விளையாடி த்ரில் வெற்றி பெற்றது.
இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டு ஆடுகிறது இந்தியா. இதே க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடந்த போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி
அதே ஆடுகளத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடப்பதால் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பெரிய ஸ்கோரை அடிக்கும் முனைப்பில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.