Asianet News TamilAsianet News Tamil

IND vs SA: காய்னே இல்ல.. எப்படி டாஸ் போடுறது..? ஜவகல் ஸ்ரீநாத்தின் மறதியால் மைதானத்தில் கலகல.. வைரல் வீடியோ

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி டாஸின்போது சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் டாஸ் போட காய்னை கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

india vs south africa second odi match referee javagal srinath forgets to hand coin to shikhar dhawan video goes viral
Author
First Published Oct 9, 2022, 5:01 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று ராஞ்சியில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 46 ஓவரில் 256 ரன்கள் அடித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஆடாததால் கேஷவ் மஹராஜ் கேப்டனாக செயல்படுகிறார்.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த போட்டிக்கு டாஸ் போட கேப்டன்கள் இருவரும் நின்றபோது, இந்தியா தான் போட்டியை நடத்துகிறது என்பதால் ஷிகர் தவான் தான் டாஸ் போட வேண்டும். ஆனால் தவான் மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

இதையும் படிங்க-  2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

2 கேப்டன்கள், மேட்ச் ரெஃப்ரி ஸ்ரீநாத் என அனைவருமே சில நொடிகள் சும்மா நின்றனர். பின்னர் தான் ஜவகல் ஸ்ரீநாத் காய்னை கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து பின்னர் காய்னை தவானிடம் கொடுத்தார். இந்த நகைச்சுவையான சம்பவத்தையடுத்து அனைவரும் சிரித்தனர். அந்த கலகலப்பான சம்பவத்தின் வீடியோ வைரலாகிவருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios