India vs Nepal: இந்தியா – நேபாள் போட்டிக்கும் சிக்கல்; மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுகளுக்கு இடையிலாக நாளை நடக்க இருக்கும் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், 2ஆவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து 3ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனினும், இந்திய அணி பேட்டிங் ஆடும் போதும் இரண்டு முறை மழை குறுக்கீடு இருந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் பேட்டிங் ஆடுவதற்கு முன்னதாக மழை பெய்ய தொடங்கியது. எனினும், மழை நிற்காத நிலையில், போட்டியானது கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
Men’s Asian Hockey 5s World Cup qualifier: ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி – இந்தியா சாம்பியன்!
மேலும், பாகிஸ்தான் 3 புள்ளிகள் உடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது நாளை நடக்க உள்ளது. இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Asia Cup 2023: 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வங்கதேசம்; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி பகிர்ந்து அளிக்கப்பட்டால் இந்தியாவிற்கு 2 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலமாக இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். ஆனால், நேபாள் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.