Asianet News TamilAsianet News Tamil

சதத்தை தவறவிட்ட புஜாரா.. சதத்தை நெருங்கும் ஷ்ரேயாஸ்! முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் அவுட்டான அக்ஸர் படேல்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் சதத்தை நோக்கி ஆடிவரும் நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்ஸர் படேல் ஆட்டமிழந்தார்.
 

india vs bangladesh first test match first day play report
Author
First Published Dec 14, 2022, 5:57 PM IST

இந்தியா  - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க இந்த தொடரில் வங்கதேசத்தை 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் வெற்றி முனைப்பில் இந்தியா களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்திய அணி:

ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் எல்லாம் தருகிறோம்..! அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்த சஞ்சு சாம்சன்

வங்கதேச அணி:

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ்,  டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(22) மற்றும் ஷுப்மன் கில் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் அடிக்க, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் அடித்தார். 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார் புஜாரா. புஜாரா -ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் 26 பந்தில் 14 ரன்கள் அடித்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்து அதிருப்தியளித்தார். கடைசி பந்தை சரியாக ஆடியிருந்தால் 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம்.

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

அக்ஸர் படேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். சதத்தை நோக்கி ஷ்ரேயாஸ் சிறப்பாக ஆடிவருகிறார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios