Gabba Test: வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா: நினைவு கூர்ந்து டுவிட்டரில் வாழ்த்து!
ஆஸ்திரேலியாவில் கப்பா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நாளை டுவிட்டரில் பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஒரு நாள் தொடரை 2-1 என்று ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஒரு நாள் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக இருந்தார். இதற்கு அஜின்க்யா ரகானே கேப்டனாக இருந்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3ஆவது போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தது. இதையடுத்து, 33 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆடியது.
இவ்வளவு அதிக ஸ்கோர் கொண்ட ஒரு போட்டியை ஹைதராபாத் பார்த்ததில்லை: முகமது அசாருதீன்!
எனினும் 2ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் மட்டுமே எடுத்து 327 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி ஆடியது. இதில், சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 7 ரன்களில் வெளியேறினார். புஜாரா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். மாயங்க் அகர்வால் 9, வாஷிங்டன் சுந்தர் 22, ஷர்துல் தாக்கூர் 2, ரகானே 24 என்று வரிசையாக ஒவ்வொருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருபுறம் இந்திய அணிக்காக போராடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார். கடைசியாக இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் 138 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 89 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சுப்மன் கில் சாதனை: கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்!
இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலமாக இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்த சாதனை படைத்து நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், டுவிட்டரில் கப்பா (#Gabba) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதுமட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அந்த வெற்றியை தற்போது நினைவு கூர்ந்து வருகின்றனர். பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷாவும் தன் பங்கிற்கு இந்த சாதனையை நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்லக் டீம் இந்தியா: ராய்பூரில் உற்சாக வரவேற்பு: வீரர்களைக் கண்டு துள்ளிக் குதித்த ரசிகர்கள்!