குட்லக் டீம் இந்தியா: ராய்பூரில் உற்சாக வரவேற்பு: வீரர்களைக் கண்டு துள்ளிக் குதித்த ரசிகர்கள்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை ராய்ப்பூரில் நடக்க உள்ள நிலையில், ராய்பூர் வந்த இந்திய வீரர்களுக்கு அவர்கள் தங்கும் ஹோட்டலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ஏற்கனவே ஹைதராபாத் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஆடி 349 ரன்கள் குவித்தது. இதில், இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 149 பந்துகளில் 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் உள்பட 208 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 2ஆவது பந்துல் ஆட்டமிழந்தார்.
Womens T20I Tri-Series: முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த இந்திய பெண்கள் அணி!
ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்றாவது நடுவர் தவறான தீர்ப்பு அளித்ததன் மூலமாக அவர் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பிரேஸ்வெல் காட்டடி காட்ட அந்த அணி ஜெயித்துவிடுமோ என்ற பயம் தான் ஒவ்வொருவருக்கும் வந்தது. 78 பந்துகளில் 10 சிக்சர்கள் 12 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் ஷர்துல் தாக்கூர் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக அன்றைய போட்டிக்கு ஷர்துல் தாக்கூர் கடவுளாக பார்க்கப்பட்டார்.
Hockey World Cup 2023: வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!
இறுதியாக நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக நியூசிலாந்து அணிக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மைதானத்தில் நாளை நடக்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்று ராய்ப்பூரில் உள்ள அவர்கள் தங்கும் ஹோட்டலுக்கு வந்தனர். அப்போது, ஹோட்டலுக்கு வெளியில் ரசிகர்கள் குவிந்து இந்தியா இந்தியா இந்தியா என்று கோஷம் எழுப்பினர். அதில், ஒரு விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார்.
இதுலாம் கிரிக்கெட்டே இல்ல.. இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்
ஹோட்டலுக்குள் வந்த வீரர்களுக்கு ராய்ப்பூர் வழக்கப்படி மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பாரம்பரிய நடனம் ஆடுபவர்கள் இந்திய அணிக்கு குட்லக் டீம் இந்தியா என்று வாழ்த்து தெரிவித்தனர். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ