ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெத்..! நியூசி.,க்கு எதிரான ODI-யில் ஜெயித்த இந்திய அணிக்கு இப்படியொரு சோதனையா..?
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்தது. ஷுப்மன் கில் 149 பந்தில் 208 ரன்களை குவித்தார்.
இதுலாம் கிரிக்கெட்டே இல்ல.. இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்
350 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்துஅணி, டேரைல் மிட்செலின் அதிரடியான சதத்தால் (140) இலக்கை நெருங்கினாலும், எட்ட முடியவில்லை. 50 ஓவரில் 337 ரன்களை குவித்து 12 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், டேரைல் மிட்செல் இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டினார். டேரைல் மிட்செல் பேட்டிங் ஆடியபோது, அவரை வீழ்த்த வியூகம் வகுத்த விதத்தில் இந்திய அணி சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது.
அதனால் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட இந்திய அணி அதிகமாக எடுத்துக்கொண்டது. 3 ஓவர்கள் தாமதமாக வீசியது இந்திய அணி. இதையடுத்து இந்திய அணிக்கு ஊதியத்தில் 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், இந்திய அணி 3 ஓவர்கள் தாமதமாக வீசியதை கண்டறிந்து அபராதம் விதித்தார்.
IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ
ஒரு ஓவர் தாமதத்திற்கு போட்டி ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதம். 3 ஓவர்கள் தாமதமாக வீசியதால் இந்திய வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 60 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் ஜெயித்திருந்தாலும், போட்டி ஊதியத்தில் ஒவ்வொரு வீரரும் 60 சதவிகிதத்தை அபராதமாக கட்டவேண்டியுள்ளது. ஊதியத்தில் பாதியைவிட 10 சதவிகிதம் அதிகமாக அபராதம் கட்டுகின்றனர் இந்திய வீரர்கள்.