சுப்மன் கில் சாதனை: கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்ததை சக வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி ஹாட்ரிக் சிக்சர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்து விராட் கோலி, ஹர்திக் பாண்டியா சாதனையை முறியடித்தார். அவர், 149 பந்துகளில் 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் உள்பட 208 ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி 2 ரன்களில் இஷான் கிஷானின் சாதனையையும் முறியடிக்க கோட்டைவிட்டார்.
குட்லக் டீம் இந்தியா: ராய்பூரில் உற்சாக வரவேற்பு: வீரர்களைக் கண்டு துள்ளிக் குதித்த ரசிகர்கள்!
ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்றாவது நடுவர் தவறான அவுட் கொடுக்க அவர் 28 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 31 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் இருவரும் ஜோடி சேர்த்து இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். காட்டு காட்டுன்னு காட்டிய பிரேஸ்வேல் 10 சிக்சர்கள், 12 பவுண்டர்கள் அடித்த நிலையில், 78 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் அவுட்டானார். இதன் மூலமாக நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது.
IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ
இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், போட்டி முடிந்த ஓய்வு அறைக்கு திரும்பிய இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில் அடித்த இரட்டை சதத்தை பாராட்டும் வகையில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி அவரது திறமையை பாராட்டும் வகையில் ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, சகால், ஷர்துல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
Womens T20I Tri-Series: முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த இந்திய பெண்கள் அணி!
சுப்மன் கில் கேக் வெட்டினார். இந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை ராய்ப்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ராய்ப்பூர் வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
Hockey World Cup 2023: வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!