Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்தியா: இனிமேல் 5 மாசத்திற்கு டெஸ்ட் இல்லையா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட்டின் கடைசி நாள் போட்டி இன்று நடக்கிறது.

India Play its Final Day of test Match; there is no test matches for indian team next 5 month
Author
First Published Jul 24, 2023, 5:46 PM IST

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசோவில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது.

500 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் – ஜடேஜா சுழல் காம்போ!

இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களும் எடுத்தனர். பின்னர் 183 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், இந்தியா 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்யவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 364 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்து 2ஆவது இடத்திற்கு முன்னேறிய இஷான் கிஷான்!

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. இதில், 4ஆம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், டெகனரைன் சந்தர்பால் 24 ரன்களும், ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

மழையால் ரத்தான 5 ஆம் நாள்: கடைசியாக டிராவில் முடிந்த 4ஆவது டெஸ்ட்!

இந்த நிலையில், இந்தியா இன்று தனது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் விளையாடுகிறது. அதன் பிறகு இந்திய அணிக்கு கிட்டத்தட்ட 5 மாதத்திற்கு எந்த டெஸ்ட் போட்டியும் கிடையாது. இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அயர்லாந்துக்கு எதிராக டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.

இஷான் கிஷான் அரைசதம் அடிக்கும் வரை காத்திருந்து டிக்ளேர் செய்த ரோகித் சர்மா!

இதையடுத்து, ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் 2023 தொடரிலும் விளையாடுகிறது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் நடக்கிறது. இப்படி தொடர்ந்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருப்பதால் அடுத்த 5 மாத காலத்திற்கு இந்திய அணி எந்த டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ACC Mens Emerging Asia Cup 2023 Final: தேசிய கொடியில் மோடின்னு எழுதி காண்பித்த ரசிகர்களால் சர்ச்சை!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios