500 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் – ஜடேஜா சுழல் காம்போ!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசோவில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது.
விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்து 2ஆவது இடத்திற்கு முன்னேறிய இஷான் கிஷான்!
இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களும் எடுத்தனர். பின்னர் 183 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், இந்தியா 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்யவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 364 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மழையால் ரத்தான 5 ஆம் நாள்: கடைசியாக டிராவில் முடிந்த 4ஆவது டெஸ்ட்!
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது. 4ஆம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.
இஷான் கிஷான் அரைசதம் அடிக்கும் வரை காத்திருந்து டிக்ளேர் செய்த ரோகித் சர்மா!
முதல் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் கைப்பற்ற மொத்தமாக அஸ்வின் 12 விக்கெட்டும், ஜடேஜா 5 விக்கெட்டும் என்று முதல் டெஸ்டில் மட்டுமே இருவரும் இணைந்து 17 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இப்படி இருவரும் இணைந்து விளையாடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 495 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
ACC Mens Emerging Asia Cup 2023 Final: தேசிய கொடியில் மோடின்னு எழுதி காண்பித்த ரசிகர்களால் சர்ச்சை!
இந்த நிலையில், 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் ஒரு விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 2ஆவது இன்னிங்ஸில் தற்போது வரையில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் கைப்பற்றவே மொத்தமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழல் காம்போவாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி 500 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.