WTC Final: டேரெக்டாக களத்தில் இறங்க கூடாது, ஃபர்ஸ்ட் பிட்ச் கண்டிஷன் பாக்கனும் - அதுக்கு பயிற்சி போட்டி தேவை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சி போட்டியில் இந்தியா விளையாட வாய்ப்பு உள்ளது.
 

India likely to play practice game against County XI before WTC Final

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் பல சீனியர் வீரர்கள், டெஸ்ட்டில் இடம் பெறும் பிளேயிங் 11 குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

WTC Finalலில் அஸ்வின், ஜடேஜா இருக்கும் வரையில் கவலை இல்லை - சுனில் கவாஸ்கர்!

அந்த வகையில், சுனில் கவாஸ்கரும் பிளேயிங் 11 குறித்து கருத்து தெரிவித்தார். அதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயதேவ் உனத்கட், முகமது ஷமி மற்று முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ரொம்ப பெரிய பிளான்லாம் போடல; சிம்பிள் பிளான் போட்டு சிஎஸ்கேவை காலி பண்ணிட்டோம் - சஞ்சு சாம்சன்!

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக கிளப் அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாடினால் அங்குள்ள சூழல், மைதானம் குறித்து இந்திய வீரர்கள் அறிந்து கொள்ள முடியும். அதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம், பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதுவரையில் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பயிற்சி போட்டி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios