WTC Finalலில் அஸ்வின், ஜடேஜா இருக்கும் வரையில் கவலை இல்லை - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கும் வரையில் இந்திய அணிக்கு எந்த கவலையும் இல்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டீம் இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் பல சீனியர் வீரர்கள், டெஸ்ட்டில் பங்கேற்கும் பிளேயிங் 11 குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்
அந்த வகையில், சுனில் கவாஸ்கரும் பிளேயிங் 11 குறித்து கருத்து தெரிவித்தார். அதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயதேவ் உனத்கட், முகமது ஷமி மற்று முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது சிறப்பான பங்களிப்பு மீண்டும் தொடரும். ஆகையால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இதே நிலை தான் தொடரும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அதற்கு காரணம், டெஸ்ட் அணியில் 8ஆவது இடத்தில் 5 டெஸ்ட் சதங்கள் அடித்த அஸ்வின் இருக்கிறார். மேலும் ஓவல் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
முதலில் டாஸ் வென்று 2 நாட்களுக்குள் பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் 2ஆவது இன்னிங்ஸ் ஆட வேண்டிய தேவை வராது என்று கூறியுள்ளார். அதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள மைதான சூழலுக்கு ஏற்ப பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்
மேலும், வரும் மே 28 ஆம் தேதியுடன் ஐபிஎல் முடிவடையும் நிலையில், ஒரு வாரத்திற்குள்ளாக அதுவும் ஜூன் 7ஆம் தேதியே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. ஆதலால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணியில் உள்ள வீரர்கள் முன் கூட்டியே இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்று அங்கு கிளப் அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.