டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. "Chak De India" முழக்கத்தால் அதிர்ந்த மெல்பர்ன் ஸ்டேடியம்
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஜெயித்த பின், மெல்பர்ன் ஸ்டேடியம் Chak De India முழக்கத்தால் அதிர்ந்தது.
டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மெல்பர்னில் நடந்தது. டி20 உலக கோப்பையில் இதைவிட பரபரப்பான போட்டியை எதிர்பார்க்க முடியாது. அந்தளவிற்கு எந்தவித பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் பரபரப்பாக இருந்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, ஷான் மசூத் (52) மற்றும் இஃப்டிகார் அகமது(51) ஆகிய இருவரின் அரைசதத்தால் 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது.
இதையும் படிங்க - தோற்க வேண்டிய மேட்ச்சை ஜெயித்து கொடுத்த கோலி.. இதுதான் நண்பா உன்னோட பெஸ்ட் இன்னிங்ஸ்! ரோஹித் புகழாரம்
160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 31 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதிலும், கோலி - ஹர்திக் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப்(113) இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. சேஸிங்கில் கிங்கான விராட் கோலியின் விண்டேஜ் பேட்டிங்கை ரசிகர்கள் காண கிடைத்தது பெரும் பாக்கியம். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்ற விராட் கோலி 53 பந்தில் 82 ரன்களை குவித்தார்.
இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த டி20 உலக கோப்பையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானை பழிதீர்த்தது.
இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி
இந்த வெற்றியை இந்திய வீரர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். சுமார் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய மெல்பர்ன் ஸ்டேடியம் ரசிகர்களால் நிரம்பிவழிந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பின், ஒட்டுமொத்த ஸ்டேடியமும் சுமார் 90000 ரசிகர்களின் Chak De India முழக்கத்தால் அதிர்ந்தது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.