Asianet News TamilAsianet News Tamil

BAN vs IND: இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்னவென்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 

india captain rohit sharma reveals the reason fordefeat against bangladesh in first odi
Author
First Published Dec 4, 2022, 8:31 PM IST

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், குல்தீப் சென்.

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், ஹசன் மஹ்மூத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், எபாடட் ஹுசைன்.

முதல் ODI: ஜெயிக்க வேண்டிய போட்டியில் வெற்றியை வங்கதேசத்துக்கு தாரைவார்த்த இந்தியா! வங்கதேசம் த்ரில் வெற்றி

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் (7) மற்றும் ரோஹித் சர்மா (27) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (24), வாஷிங்டன் சுந்தர்(19), ஷபாஸ் அகமது(0), ஷர்துல் தாகூர்(2), தீபக் சாஹர்(0) ஆகியோர் ஒருமுனையில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 73 ரன்களுக்கு 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

187 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி, 136 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு மெஹிடி ஹசனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மெஹிடி ஹசன் அபாரமாக பேட்டிங் ஆடி 38 ரன்களை விளாசி வங்கதேச அணியை வெற்றி பெற செய்தார். கடைசி விக்கெட்டுக்கு மெஹிடி ஹசனும்  முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் இணைந்து 51 ரன்கள் அடித்து வங்கதேசத்தை வெற்றி பெற செய்தனர். ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது வங்கதேச அணி.

இந்தியாவுக்கு வரமாட்டோம்னு அடம்பிடித்த பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா! வெளுத்துவாங்கிய முன்னாள்வீரர்

9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, கடைசி ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது. இந்த போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 186 ரன்கள் கொஞ்சம்கூட போதாது. ஆனாலும் நல்ல கம்பேக் கொடுத்தோம். முதல் பந்திலிருந்தே பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பவுலர்கள் அவர்கள் பணியை சரியாக செய்தார்கள். நாங்கள் அடித்த ஸ்கோர் தான் போதாது. இன்னும் 25-30 ரன்கள் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸில் 25 ஓவர்கள் முடிந்த நிலையில், 250 ரன்களாவது அடிக்க வேண்டும் என்று நினைத்தோம். குறைவான ஸ்கோர் அடித்ததுதான் தோல்விக்கு காரணம் என்றார் ரோஹித் சர்மா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios