Asianet News TamilAsianet News Tamil

முதல் ODI: ஜெயிக்க வேண்டிய போட்டியில் வெற்றியை வங்கதேசத்துக்கு தாரைவார்த்த இந்தியா! வங்கதேசம் த்ரில் வெற்றி

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 

bangladesh beat india by one wicket in first odi
Author
First Published Dec 4, 2022, 7:29 PM IST

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், குல்தீப் சென்.

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், ஹசன் மஹ்மூத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், எபாடட் ஹுசைன்.

இந்தியாவுக்கு வரமாட்டோம்னு அடம்பிடித்த பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா! வெளுத்துவாங்கிய முன்னாள்வீரர்
 
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் (7) மற்றும் ரோஹித் சர்மா (27) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (24), வாஷிங்டன் சுந்தர்(19), ஷபாஸ் அகமது(0), ஷர்துல் தாகூர்(2), தீபக் சாஹர்(0) ஆகியோர் ஒருமுனையில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 73 ரன்களுக்கு 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேச அணி சார்பில் சீனியர் ஸ்பின்னர் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், எபாடட் ஹுசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

187 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷாண்டோவை முதல் பந்திலேயே வீழ்த்தினார் தீபக் சாஹர். 3ம் வரிசையில் இறங்கிய அனாமுல் ஹக்கை 14 ரன்களுக்கு சிராஜ் வெளியேற்றினார். நிலைத்து நின்று நன்றாக ஆடிய கேப்டனும் தொடக்க வீரருமான லிட்டன் தாஸை 41 ரன்களுக்கு அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர், சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசனை 29 ரன்களுக்கு வீழ்த்தினார்.

அதன்பின்னர் வங்கதேச அணியின் சீனியர் வீரர்கள் மஹ்மதுல்லா மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், மஹ்மதுல்லாவை 14 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷர்துல் தாகூர். 34வது ஓவரின் கடைசி பந்தில் மஹ்மதுல்லாவை ஷர்துல் தாகூர் வீழ்த்த, அடுத்த ஓவரின் முதல் பந்தில் முஷ்ஃபிகுர் ரஹீமை 18 ரன்களுக்கு சிராஜ் வீழ்த்தினார். 

அதன்பின்னர் அஃபிஃப் ஹுசைன் (6) மற்றும் எபாடட் ஹுசைன் (0) ஆகிய இருவரையும் குல்தீப் சென் வீழ்த்தினார். 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. கடைசி விக்கெட்டுக்கு மெஹிடி ஹசனும் முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் இணைந்து சிறப்பாக இணைந்து பேட்டிங் ஆடி இலக்கை அடித்தனர். மெஹிடி ஹசன் அபாரமாக பேட்டிங் ஆட, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடி ஒத்துழைப்பு கொடுத்தார். மெஹிடி ஹசன் 41 ரன்களும், முஸ்தாஃபிசுர் 10 ரன்களும் அடித்து வங்கதேசத்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். கடைசி விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 54 ரன்களை குவித்து வங்கதேசத்தை வெற்றி பெற செய்தனர்.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல், 9 விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி கடைசி விக்கெட்டை வீழ்த்தமுடியாமல் தோல்வியடைந்தது. வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி வெற்றியை வங்கதேசத்துக்கு தாரைவார்த்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios