அண்டர் 19 உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. ப்ரியம் கர்க் தலைமையில் இந்த உலக கோப்பையில் ஆடிவரும் இந்திய அணி, முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு ஆடியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 297 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான திவ்யான்ஸ் சக்ஸேனா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தனர். 

சக்ஸேனா ஆட்டமிழந்த பிறகும், சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 59 ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ப்ரியம் கர்க் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் சிறப்பாக ஆடினர். திலக் வர்மா 46 ரன்கள் அடித்தார். ப்ரியம் கர்க் அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read - ராகுல் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்.. உறுதி செய்த கேப்டன் கோலி.. ரிஷப் பண்ட்டுக்கு ஆப்பு

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த த்ருவ் ஜுரேல், சித்தேஷ் வீர் ஆகியோரும் சிறப்பாகவே ஆடினர். த்ருவ் அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிய சித்தேஷ் வீர் 44 ரன்கள் அடித்து அவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரியம் கர்க், திலக் வர்மா, த்ருவ், சித்தேஷ் வீர் என அனைவருமே சிறப்பாக பேட்டிங் ஆடியதன் விளைவாக இந்தியா அண்டர் 19 அணி 50 ஓவரில் 297 ரன்களை குவித்தது. 

Also Read - ஜெயசூரியாவின் சாதனைகளை கங்கனம் கட்டி காலி செய்யும் ரோஹித்.. அடுத்த சாதனையையும் தகர்த்தெறிந்த ரோஹித்

298 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் கேப்டன் நிபுன் தனஞ்செயா மட்டுமே அரைசதம் அடித்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய ரவிந்து ரசந்தா 49 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர வேறு எந்த இலங்கை வீரரும் சரியாக ஆடவில்லை. இந்திய பவுலர்களின் சிறப்பான பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் 207 ரன்களுக்கே இலங்கை அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.