Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் ஓவர் இல்லை - டிராவில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி – ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியானது டிராவில் முடிந்துள்ளது.

India and Sri Lanka 1st ODI Match Tied due to India all out for 230 Runs at Colombo rsk
Author
First Published Aug 2, 2024, 10:15 PM IST | Last Updated Aug 2, 2024, 10:14 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்புவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக துணித் வெல்லாலகே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பதும் நிசாங்கா 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

வெண்கலப் பதக்க போட்டி: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத் ஜோடி தோல்வி!

பின்னர் 231 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில், சுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்துக் கொடுத்து நடையை கட்டினார். இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசி சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா அதிக சிக்ஸர்களை விளாசியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15,000 ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ரோகித் சர்மாவைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி - ஹாக்கி ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு சென்ற இந்தியா!

அதன் பிறகு 24 ரன்களில் விராட் கோலியும், 23 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்தனர். பின்னர் கேஎல் ராகுல் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் 6ஆவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். ராகுல் 31 ரன்களில் ஆட்டமிழக்கவே, அக்‌ஷர் படேல் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கடைசியாக ஷிவம் துபே மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். குல்தீப் யாதவ் 2 ரன்களில் நடையை கட்டவே, அடுத்து முகமது சிராஜ் களமிறங்கினார். இருவரும் பொறுமையாக ரன்கள் சேர்த்தனர். துபே 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 25 ரன்கள் எடுத்தார். கடைசியில் போட்டி டிரா செய்யப்பட்ட நிலையில் துபே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

IND vs SL 1st ODI: பதும் நிசாங்கா, துணித் வெல்லாலகே சிறப்பான அரைசதம் – இலங்கை 230 ரன்கள் குவிப்பு!

இறுதியாக ஒரு ரன்னுக்காக கடைசி விக்கெட்டாக அர்ஷ்தீப் சிங் களமிறங்கினார். வந்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் அவரும் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவர் இல்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருக்கும். இதுவரையில் இலங்கைக்கு எதிராக 99 வெற்றிகளை இந்தியா குவித்துள்ளது. ஆனால், இந்தப் போட்டியானது டிராவில் முடிந்தது.

இதற்கு முக்கிய காரணம், 47.4 மற்றும் 47.5ஆவது ஓவரில் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ஷிவம் துபே மட்டும் சிக்ஸரோ, பவுண்டரியோ அடித்திருந்தால் அந்த பந்திலேயே இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்த பந்திலேயே அர்ஷ்தீப் சிங்கும் ஆட்டமிழந்தார். 2ஆவது ஒருநாள் போட்டி வரும் 4ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது.

Paris 2024 Olympics: மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி – இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கம் கன்ஃபார்ம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios