மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாகத் தொடங்குகிறது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதனால், ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்க உள்ளது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்கு முன்னதாக மழை பெய்ததால், டாஸ் போடுவதும், போட்டியும் சற்றுக் காலதாமதமாகத் தொடங்குகிறது. ஆனால், ஓவர்கள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. முழுமையாக 50 ஓவர் ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்தக் கோப்பைப் போட்டி மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
இரு அணி வீராங்கனைகள் விவரம்
இந்தியா அணி (பிளேயிங் லெவன்):
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கௌர், ராதா யாதவ், க்ராந்தி கௌட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்.
தென் ஆப்பிரிக்கா அணி (பிளேயிங் லெவன்):
லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அனெகே போஷ், சுனே லூஸ், மரிஸானே கப், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), அன்னேரி டெர்க்சென், க்ளோ ட்ரையோன், நதீன் டி க்ளார்க், அயபோங்கா காகா, நோன்குலெலெகோ ம்லாபா.
