MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியர்களுக்கு பிடித்த 'கேன் மாமா'..! கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு..! ரசிகர்கள் ஷாக்!

இந்தியர்களுக்கு பிடித்த 'கேன் மாமா'..! கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு..! ரசிகர்கள் ஷாக்!

Kane Williamson T20I Retirement: இந்தியர்கள் பாசத்துடன் 'கேன் மாமா' என்று அழைக்கும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Nov 02 2025, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கேன் வில்லியம்சன் ஓய்வு
Image Credit : Getty

கேன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குறுகிய வடிவ கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று அவர் கூறியுள்ளார். அதே வேளையில் டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

24
ஓய்வு பெற சரியான நேரம்
Image Credit : stockPhoto

ஓய்வு பெற சரியான நேரம்

''நீண்ட காலமாக நான் விரும்பிய ஒன்றின் ஒரு பகுதியாக இருந்தேன். அந்த நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்கும் அணிக்கும் இது சரியான நேரம். இது அணிக்கு அடுத்த தொடர்களுக்கும், அவர்களின் அடுத்த முக்கிய இலக்கான டி20 உலகக் கோப்பைக்கும் ஒரு தெளிவைக் கொடுக்கும்'' என்று வில்லியம்சன் கூறியுள்ளார்.

''நியூசிலந்தில் நிறைய டி20 திறமையாளர்கள் உள்ளனர். அடுத்த காலகட்டம் இந்த வீரர்களுக்கு கிரிக்கெட் வாய்ப்புகளை வழங்கி, அவர்களை உலகக் கோப்பைக்கு தயார்படுத்துவது முக்கியம்'' என்றும் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியா அபார வெற்றி..! SKY செய்த தவறு! இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்!
Related image2
IND VS SA மகளிர் உலகக்கோப்பை பைனல் மழையால் ரத்தானால் யாருக்கு கோப்பை? ரிசர்வே டே உண்டா?
34
டி20 கிரிக்கெட்டில் வில்லியம்சன் சாதனை
Image Credit : AFP

டி20 கிரிக்கெட்டில் வில்லியம்சன் சாதனை

35 வயதான வில்லியம்சன் 33 சராசரியுடன் 2575 ரன்கள் குவித்து, நியூசிலாந்தின் இரண்டாவது அதிக டி20 ரன் குவித்த வீரராக உள்ளார். இதில் 18 அரைசதங்கள் அடங்கும். 95 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளார். 2011-ல் டி20 போட்டிகளில் அறிமுகமான வில்லியம்சன், 75 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

அவரது தலைமையில் அந்த அணி இரண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கும் (2016 & 2022) மற்றும் ஒரு இறுதிப் போட்டிக்கும் (2021) தகுதி பெற்றது.

உலகின் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்

நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் வீனின்க், வில்லியம்சனின் முடிவை மதிப்பதாகவும், டி20 அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு வணக்கம் செலுத்துவதாகவும் கூறினார்.

“ஒரு வீரராக கேனின் செயல்பாடுகளும், டி20 அணியின் கேப்டனாக அவரது சேவையும் அளப்பரியது. உலகம் முழுவதும் அனைத்து சூழல்களிலும் அவர் குவித்த ரன்கள், அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதைப் பிரதிபலிக்கின்றன. அவர் நிச்சயமாக அணியை நல்ல நிலையில் விட்டுச் செல்கிறார்'' என்று ஸ்காட் வீனின்க் தெரிவித்துள்ளார்.

44
'கேன் மாமா' ஓய்வால் இந்தியர்கள் ஷாக்
Image Credit : others

'கேன் மாமா' ஓய்வால் இந்தியர்கள் ஷாக்

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி எதிரணி வீரர்களிடம் எந்த அளவுக்கு சண்டை போட்டும் என்பதும் அறிந்ததே. ஆனால் ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்து அமைதிக்கு பெயர்போன ஒரு அணியாக உள்ளது. நியூசிலாந்து வீரர்கள் எதிரணி வீரர்களிடம் எந்த சண்டைக்கும் செல்லாமல் அமைதியாக இருப்பதால் உலகின் அனைத்து ரசிகர்களுக்கும் அவர்களை பிடிக்கும்.

இதேபோல் கேன் வில்லியம்சனும் தோல்வி கண்டாலும் சிரித்த முகத்துடன் வலம் வருபவர். இதனால் நியூசிலாந்து அணியையும், கேன் வில்லியம்சனையும் இந்தியர்களுக்கு அதிகம் பிடிக்கும். இந்திய ரசிகர்கள் வில்லியம்சனை 'கேன் மாமா' என்று பாசத்துடன் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
Recommended image2
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Recommended image3
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியா அபார வெற்றி..! SKY செய்த தவறு! இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்!
Recommended image2
IND VS SA மகளிர் உலகக்கோப்பை பைனல் மழையால் ரத்தானால் யாருக்கு கோப்பை? ரிசர்வே டே உண்டா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved