ICC WTC புள்ளி பட்டியல்: பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவிற்கு ஃபைனல் வாய்ப்பு..!

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், இந்திய அணிக்கு ஃபைனல் வாய்ப்பு உள்ளது.
 

icc wtc points table update after pakistan vs england first test india has chance to enter to final

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனலில் ஆடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

2022ல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்கள்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி 72.73 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 60 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும் உள்ளன. இலங்கை அணி 52.33 சதவிகிதத்துடன் 3ம் இடத்தில் உள்ளது. இலங்கையை விட வெறும் 0.25 சதவிகிதம் மட்டுமே பின் தங்கி 4ம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவரும் நிலையில், முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றி விகிதம் 46.67ஆக குறைந்துள்ளது. 

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

அதனால் இந்திய அணிக்கு ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் மட்டும் தோற்று, மற்ற போட்டிகளில் ஜெயித்தால் ஃபைனல் வாய்ப்பு உள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios