ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்கிறேன்; மனசாட்சி சொல்லியிருச்சு - ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்!
வரும் ஐபிஎல் சீசனில் ஏதாவது ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்கிறேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட ரைடர்ஸ் என்று மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த ஆண்டு 2ஆவது இடம் பிடித்தது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆவது இடம் பிடித்தது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனையை குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது.
மீண்டு வருமா ஆர்சிபி: இதெல்லாம் நடந்தால் ஒரு வாய்ப்பு இருக்கு; இல்லைன்னா இறைவன் விட்ட வழி தான்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலைதளம், பேடிஎம் டிக்கெட்ஸ் மற்றும் டைட்டன்ஸ் FAM செயலி வழியே ரசிகர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று குஜராத் டைட்டன்ஸ் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ரியான் பராக், தான் இந்த சீசனில் ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்கிறேன் என்றும், தனது மனசாட்சி சொல்லியதாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார்.