முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. காலிறுதி போட்டிகள் முடிந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது ரஞ்சி தொடர். 

அரையிறுதிக்கு குஜராத், சவுராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பெங்கால் ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. 4 காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில், சவுராஷ்டிரா மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான போட்டியில் சவுராஷ்டிரா அணி மிகச்சிறப்பாக ஆடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன்களை குவித்தது. அந்த போட்டி டிராவான போதும் புள்ளியின் படி சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

அதேபோல பெங்கால் மற்றும் ஒடிசா அணிகளுக்கு இடையேயான போட்டியும் டிராவில் முடிந்தது. இவற்றில் பெங்கால் அணி பாயிண்ட்ஸின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஜம்மு காஷ்மீரை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கர்நாடக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல கோவாவை 464 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற குஜராத் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 

Also Read - இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்..? அடுத்த போட்டியில் என்ன செய்யணும்..? கேப்டன் கோலி அதிரடி

குஜராத், சவுராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பெங்கால் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதி போட்டிகள் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. குஜராத் மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி ராஜ்கோட்டிலும் பெங்கால் மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவிலும் நடக்கவுள்ளது.