மனைவி நடாஷாவை பிரிந்த நிலையில், புதிய முயற்சியாக தனது பெயரிலேயே ஆடை பிராண்டை அறிமுகம் செய்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் ஸ்டிரீமிங் நிறுவனமான ஃபேன்கோடு நிறுவனம் பாண்டியாவின் ஆடை பிராண்டை விளம்பரப்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா தான் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது முதல், அம்பானி வீட்டு திருமணம், கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவி இல்லை, மனைவி நடாஷா பிரிவு என்று தினந்தோறும் டிரெண்டிங்கிலேயே இருந்து வருகிறார். சீனியர் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஆதரவாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மனைவி நடாஷாவை பிரிந்து ஓரிரு நாட்களில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆடை பிராண்டை அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆன்லைன் ஸ்டிரீமிங் நிறுவனமான ஃபேன்கோடு நிறுவனம் ஹர்திக் பாண்டியாவின் ஆடை பிராண்டை விளம்பரப்படுத்தியுள்ளது. இது குறித்து ஃபேன்கோடு அதிகார்ப்பூர்வ வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹர்திக் பாண்டியா தனது பெயரில் ஆடைகளை வடிவமைத்துள்ளார். இது உலகின் முதன்மையான ஆல்ரவுண்டராக விளங்கும் பாண்டியாவின் உடற்தகுதி மற்றும் சிறந்து விளங்குவதற்கான அவரது ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது.
நடாஷாவை திருமணம் செய்வதற்கு முன் பாண்டியா யாரையெல்லாம் காதலித்திருக்கிறார் தெரியுமா?
மும்பையில் நடைபெற்ற பிராண்ட் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது பெயரில் வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிந்து கொண்டு தனது புதிய பயணத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். அவரது முகத்தில் மனைவி உடனான பிரிவு பற்றியோ அல்லது டி20 கேப்டன் பதவி இல்லாதது பற்றியோ கொஞ்சம் கூட கவலையே இல்லை.
மரண காட்டு காட்டிய ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் - இந்தியா மகளிர் அணி 201 ரன்கள் குவிப்பு!
ஹர்திக் பாண்டியா அறிமுகம் செய்து வைத்த ஆடை பிராண்டுகள் ஃபேன்கோடு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
