Asianet News TamilAsianet News Tamil

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Hardik Pandya as captain of three-match T20I series against Sri Lanka
Author
First Published Dec 28, 2022, 9:28 AM IST

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, டி 20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் என்றும் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! கேப்டன் யார்..?

ரோகித் சர்மாவிற்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் டி20 தொடரில் பங்கேற்கவில்லை. ஷிவம் மவி மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஷிவம் மவியை ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டெல்லி கேபிடள்ஸ் அணி முகேஷ் குமாரை ரூ.5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஷிவம் மவி மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரும் டி20 தொடரில் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷிகர் தவான், கே எல் ராகுல் ஆகியோர் டி20 தொடரில் இடம் பெறவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசத்திற்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் 131 பந்துகளில் 10 சிக்சர்கள் 24 பவுண்டரிகள் உள்பட 210 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இளம் வீரரான இஷான் கிஷான் டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஒரு நாள் போட்டி தொடரில் இடம் பெற்றுள்ளார்.

இரட்டை சதத்தை ஆக்ரோஷமா கொண்டாடி காலை உடைத்துக்கொண்டு களத்தை விட்டு வெளியேறிய வார்னர்..! வைரல் வீடியோ
 

டி20 போட்டிக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் கூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, முகேஷ் குமார்.

கோலியை அதிகமுறை வீழ்த்திய பவுலர்; ஐபிஎல்லில் அபாரமான சாதனைகளுக்கு சொந்தக்கார பவுலர்! ஏலத்தில் விலைபோகாத கொடுமை

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

Follow Us:
Download App:
  • android
  • ios