IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! கேப்டன் யார்..?

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

sunrisers hyderabad ideal playing eleven for ipl 2023

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக கேப்டன் கேன் வில்லியம்சனை கழட்டிவிட்டு ஏலத்திற்கு அதிகபட்ச தொகையுடன் சென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ரூ.42 கோடியுடன் சென்றதால் ஏலத்தில் விரும்பிய வீரர்களை எல்லாம் சன்ரைசர்ஸ் அணியால் எடுக்க முடிந்தது.

ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.13.25 கோடி கொடுத்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை எடுத்தது. மயன்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கும், ஹென்ரிச் கிளாசனை ரூ.5.25 கோடிக்கும் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. அடில் ரஷீத், மயன்க் மார்கண்டே, அன்மோப்ரீத் சிங் ஆகிய வீரர்களையும் சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

100வது சர்வதேச டெஸ்ட்டில் சதமடித்த 10 வீரர்கள்

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார்  - மயன்க் அகர்வால் - எய்டன் மார்க்ரம் ஆகிய மூவரில் ஒருவர் கேப்டனாக அறிவிக்கப்படுவார்.

தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் களமிறங்குவார்கள். 3ம் வரிசையில் வழக்கம்போலவே ராகுல் திரிபாதியும், 4ம் வரிசையில் மார்க்ரமும் பேட்டிங் ஆடுவார்கள். 4ம் வரிசையில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள ஹாரி ப்ரூக் ஆடுவார். விக்கெட் கீப்பராக க்ளென் ஃபிலிப்ஸ் ஆடுவார். ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத் ஆடுவார்கள். 

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் ஆடுவார்கள். 

கோலியை அதிகமுறை வீழ்த்திய பவுலர்; ஐபிஎல்லில் அபாரமான சாதனைகளுக்கு சொந்தக்கார பவுலர்! ஏலத்தில் விலைபோகாத கொடுமை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்:

அபிஷேக் ஷர்மா, மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், ஹாரி ப்ரூக், க்ளென் ஃபிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத்,, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios