Asianet News TamilAsianet News Tamil

அடுத்த போட்டியில் டீம்ல இருந்து அவரை தூக்கிட்டு இவரை சேர்த்தால் ஜெயிச்சுடலாம்.. முன்னாள் வீரர் அதிரடி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

harbhajan singh wants to include extra one spinner in team india for second odi against new zealand
Author
Auckland, First Published Feb 6, 2020, 11:17 AM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

இந்த போட்டியில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக அமைந்த ஷ்ரேயாஸ் ஐயர், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார். 5ம் வரிசையில் இறங்கிய கேஎல் ராகுல், அதிரடியாக ஆடி 64 பந்தில் 88 ரன்களை விளாசினார். இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 347 ரன்களை விளாசியது இந்திய அணி. 

harbhajan singh wants to include extra one spinner in team india for second odi against new zealand

348 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹென்ரி நிகோல்ஸ், அனுபவ வீரர் ரோஸ் டெய்லர், கேப்டன் டாம் லேதம் ஆகிய மூவரின் அதிரடியான பேட்டிங்கால் 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

Also Read - நீங்க இதை மட்டும் பண்ணுங்க தம்பி.. அபாரமா ஆடியும் அணியில் புறக்கணிக்கப்பட்ட வீரருக்கு பாண்டிங்கின் அறிவுரை

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டெய்லர் சதமடித்து அசத்தினார். 109 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று, நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். பும்ராவும் ஷமியும் மட்டுமே இந்த போட்டியில் ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக வீசினர். ஜடேஜாவும் பரவாயில்லை. இவர்கள் மூவரும் 10 ஓவர்கள் வீசிய நிலையில், கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ரன்களையே விட்டுக்கொடுத்தனர். இந்த போட்டியில் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தது, குல்தீப் மற்றும் ஷர்துல் தாகூரின் பவுலிங் தான். 

harbhajan singh wants to include extra one spinner in team india for second odi against new zealand

குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூரின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தனர் நியூசிலாந்து வீரர்கள். அவர்கள் வழங்கிய கூடுதல் ரன்கள் தான் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குல்தீப் யாதவ் 84 ரன்களையும் ஷர்துல் தாகூர் 80 ரன்களையும் வழங்கினர். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 84 ரன்களையும் ஷர்துல் தாகூர் வெறும் 9 ஓவரிலேயே 80 ரன்களையும் வாரி வழங்கினர்.

Also Read - டெய்லர் நல்லாத்தான் ஆடுனாரு.. ஆனால் நாங்க தோற்றது அவரால்தான்.. கேப்டன் கோலி சொன்ன காரணம்

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், குல்தீப்பும் சாஹலும் அடுத்த போட்டியில் இணைந்து ஆட வேண்டும். நியூசிலாந்து வீரர்கள் ஃபாஸ்ட் பவுலிங்கை நன்றாக ஆடுவார்கள். ஆனால் ஸ்பின் பவுலிங்கில் திணறுவார்கள்.

harbhajan singh wants to include extra one spinner in team india for second odi against new zealand

எனவே குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் இணைந்து ஆட விட வேண்டும். இருவரும் இணைந்து ஆடினால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். கேதர் ஜாதவை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு ஸ்பின்னரை சேர்க்கலாம் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios