IPL 2023: தோனியின் வெற்றி மந்திரம் இதுதான்..! ஹர்பஜன் சிங் கருத்து

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என ஆடிய கிரிக்கெட் அனைத்திலும் தோனி நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த நிலையில், கேப்டன்சியில் அவரது வெற்றிக்கான மந்திரம் என்னவென்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

harbhajan singh reveals the winning mantra of ms dhoni as a captain amid ipl 2023

தோனி ஒரு முழுமையான கிரிக்கெட்டர். அதிரடியான பேட்டிங், அபாரமான விக்கெட் கீப்பிங் ஆகியவற்றை எல்லாம் விட மிகச்சிறந்த கேப்டனாக அறியப்படுபவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணி வென்று கொடுத்தவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் அவரே.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, அந்த அணிக்கு 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் நடப்பு சீசனுக்கு முன் நடந்த 15 சீசன்களில் 2 சீசனில் சிஎஸ்கே ஆடவில்லை. ஆடிய 13 சீசன்களில் 2 சீசனைத்தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறியது. அதற்கு முக்கியமான காரணம் தோனியின் கேப்டன்சி.

களவியூகம், வீரர்களை பயன்படுத்தும் விதம், இக்கட்டான சூழல்களில் பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்பட்டு வெற்றியை வசமாக்குவது, ஃபீல்டிங் செட்டப், உள்ளுணர்வின்படி செயல்பட்டு வெற்றி காண்பது மிகச்சிறந்த கேப்டனாக திகழ்பவர் தோனி. கேப்டன்சிக்கே பெயர்பெற்றவர் தோனி.  

IPL 2023: தோனி நினைப்பதை அந்த பையன் செய்கிறான்.. அதனால் தோனி அவனை ரிமோட் கன்ட்ரோல் மாதிரி யூஸ் பண்றாரு..!

ஐபிஎல்லில் மற்ற அணிகளில் சரியாக ஆடாத வீரர்கள் கூட, தோனியின் கேப்டன்சியில் அபாரமாக ஆடி சிஎஸ்கேவின் மேட்ச் வின்னர்களாக திகழ்ந்திருக்கின்றனர். அந்தளவிற்கு ஒரு வீரரிடமிருந்து அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் வித்தை அறிந்தவர் தோனி. அதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஷேன் வாட்சன். ஷேன் வாட்சன் ஆர்சிபியிலும் ஆடியிருக்கிறார். ஆனால் அந்த அணியில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. சிஎஸ்கே அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, 2018ல் ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்திய அணியிலிருந்தும் ஐபிஎல்லில் இருந்தும் ஒதுக்கப்பட்ட அஜிங்க்யா ரஹானேவை சிஎஸ்கே அணியில் எடுத்து, அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார் தோனி. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்களை குவித்த ரஹானே, ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடி 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். மற்றொரு போட்டியில் 19 பந்தில் அரைசதம் அடித்து சிஎஸ்கே அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

தனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனி தான் காரணம் என்று கிரெடிட் கொடுத்தார் ரஹானே. எந்தமாதிரியான வீரராக இருந்தாலும், அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் வித்தையறிந்தவர் தோனி. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரஹானே, தோனியின் கேப்டன்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் ரஹானே இடம்பிடித்தார்.

ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை சிஎஸ்கேவிற்கு வென்று கொடுத்து சிஎஸ்கேவை வெற்றிகரமான அணியாக வழிநடத்திவரும் தோனி, இந்த சீசனிலும் அபாரமாக வழிநடத்தி முதலிடத்தில் தக்கவைத்துள்ளார்.

இந்நிலையில், தோனியின் கேப்டன்சி குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் சிஎஸ்கேவில் ஆடிய ஹர்பஜன் சிங் தோனியின் கேப்டன்சி வியூகம் அறிந்தவர். 

PL 2023: டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனைகளை படைத்த விராட் கோலி

தோனி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், தோனியின் வெற்றி மந்திரமே, வீரர்களுக்கு ஆதரவளிப்பதும், அவர்களுக்கு விருப்பமான பேட்டிங் ஆர்டரில் இறங்கும் சுதந்திரத்தை அளிப்பதுமே.. அதனால் தான் சிஎஸ்கே அணி சாம்பியன் அணியாக திகழ்கிறது. வீரர்கள் மீது நம்பிகை வைத்து தொடர் வாய்ப்பளிப்பார் என்றார் ஹர்பஜன் சிங்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட பல வீரர்களை வளர்த்துவிட்டவர் தோனி தான்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios