Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கே-வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி!!

ஐபிஎல் 16 ஆவது சீசனின் முதல் போட்டியில் குஜராத் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

gujarat titans won chennai super kings by 5 wickets
Author
First Published Apr 1, 2023, 12:05 AM IST

ஐபிஎல் 16 ஆவது சீசனின் முதல் போட்டியில் குஜராத் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் 16 ஆவது சீசன் இன்று (31.03.2023) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையும் படிங்க: IPL 2023: அதிரடியாக ஆடி சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்..! மற்ற அனைவரும் சொதப்பல்.. GT-க்கு சவாலான இலக்கு

gujarat titans won chennai super kings by 5 wickets

இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. ருத்துராஜ் 50 பந்துகளை பிடித்த அவர் 92 ரன்கள் எடுத்தார். கடைசியாக வந்த தோனி அதிரடியாக ஆடி 7 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து 179 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, அபாரமாக ஆடியது. கில் வேகமாக ஆடி அரை சதம் அடித்தார்.

இதையும் படிங்க: IPL 2023: ஐபிஎல்லின் முதல் இம்பேக்ட் பிளேயர் துஷார் தேஷ்பாண்டே..! வரலாற்றில் இடம்பிடித்து சாதனை

gujarat titans won chennai super kings by 5 wickets

இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சுதர்ஷனை 22 ரன்கள் எடுத்து இருந்த போது 9.3 வது ஓவரில் ஹங்கேரக்கர் அவுட் செய்தார். பின்னர் ரஷீத் கான் மற்றும் டிவாட்டியா ஆகியோர் அபாரமாக ஆடினர். கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரி சென்றது. இதனால் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Follow Us:
Download App:
  • android
  • ios