IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார பவுலிங்.. சவாலான இலக்கை நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்து, 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசனில் அபாரமாக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், முகமது ஷமி, மோஹித்சர்மா.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் 5 தொடர் தோல்விகள்..! கங்குலியை நக்கலடித்த ரவி சாஸ்திரி
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ரிதிமான் சஹா 4 ரன்னில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 20 ரன்களுக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். நின்று ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்
அதன்பின்னர் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்கள் அடித்து அவரும் அரைசதத்தை தவறவிட்டார். அபினவ் மனோகர் 13 பந்தில் 27 ரன்கள் அடித்து முடித்து கொடுக்க, 20 ஒவரில் 177 ரன்கள் அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 178 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.