IPL 2023: GT vs MI பலப்பரீட்சை..! ரஷீத் கானை சமாளிப்பாரா ரோஹித் சர்மா..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் இன்று மோதும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் அபாரமாக ஆடிவரும் 2 அணிகள் மோதுவதால் இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். கடந்த போட்டியில் லக்னோ அணியை எளிய இலக்கை அடிக்கவிடாமல் தடுத்து த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி அதே உத்வேகத்தில் களமிறங்குகிறது.
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணி ஓர் அலசல்..! சாரி ராகுல் உங்களுக்கு இடம் இல்ல..! உத்தேச ஆடும் லெவன்
தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த போட்டியில் கேகேஆரிடம் தோற்ற நிலையில், மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்கும் முனைப்பில் குஜராத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஜெயிக்க ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியம். அதற்கு அவர், ரஷீத் கானின் சுழற்பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் ரஷீத் கானுக்கு எதிராக 21 பந்துகளை எதிர்கொண்டுள்ள ரோஹித் சர்மா 23 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் 3 முறை ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்துள்ளார். எனவே ரோஹித் சர்மா ரஷீத் கானிடம் விக்கெட்டை இழந்துவிடாமல் அவரை சமாளித்து ஆட வேண்டும்.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப், மோஹித் சர்மா.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.