மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆண்களுக்கான ஐபிஎல் தொடரைப் போன்று இந் த ஆண்டு முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 பணிகள் பங்கேற்கின்றன. இன்று ஆரம்பமான இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் 26 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

இன்று நடக்கும் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் மிக பிரமாண்டமாக பாலிவுட் நடிகைகளின் உற்சாக நடனத்துடன் தொடங்கியுள்ளது. இதில், பிரபல பஞ்சாபி பாடகர் ஏ.பி.திலன் பாடல் பாடி அசத்தியுள்ளார். பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, கிரித்தி சனோன் ஆகியோர் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியொக்களை மகளீர் பிரீமியர் லீக் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்காக பிரியாவிடை போட்டியில் பங்கேற்கும் சானியா மிர்சா!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி:

யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலீ மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிதா, இசி வாங், சைகா இஷாக், ஹுமைரா கஷி.

உத்தேச குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சபினேனி மேகனா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட், தயாலன் ஹேமலதா, ஜார்ஜியா வாரேஹம், ஸ்னே ராணா, தனுஜா கன்வர், மோனிகா படேல், மான்சி ஜோஷி

சனி மஹா பிரதோஷம்: எம்பெருமான் ஈசனை தரிசனம் செய்த கோலி - அனுஷ்கா சர்மா!