சனி மஹா பிரதோஷம்: எம்பெருமான் ஈசனை தரிசனம் செய்த கோலி - அனுஷ்கா சர்மா!
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
இந்தியா வந்த ஆஸ்திரேலியா முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில், விராட் கோலி 22 ரன்களில் முர்ஃபி ஓவரில் ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்ஸில் 13 ரன்களில் குன்மேன் ஓவரில் வெளியேறினார்.
விராட் கோலி - மகா காலேஸ்வரர் கோயில்
இதற்கு முன்னதாக நடந்த முதல் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டிகளில் 12, 2ஆவது இன்னிங்ஸ் விளையாடவில்லை, 44, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட விராட் கோலி அரைசதம் அடிக்கவில்லை.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வரும் விராட் கோலிக்குப் பதிலாக மாற்று வீரர் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அனுஷ்கா சர்மா - மகா காலேஸ்வரர் கோயில்
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத கேஎல் ராகுல் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
விராட் கோலி - மகா காலேஸ்வரர் கோயில்
அதற்கு முன்னதாக, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மகா காலேஸ்வரர் கோயில்
இன்று சனி மஹா பிரதோஷம் என்பதால் விராட் கோலி இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அனுஷ்கா சர்மா, நாங்கள் பிரார்த்தனை செய்ய வந்தோம். மகா காலேஸ்வரர் கோயிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று கூறியுள்ளார்.