கோல்ஃப் வண்டியிலிருந்து தவறி விழுந்து தலையில் காயமடைந்த கிளென் மேக்ஸ்வேல் - 6-8 நாட்கள் மருத்துவர் கண்காணிப்பு
ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் கோல்ஃப் வண்டியிலிருந்து தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியனான அணியாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. இதுவரையில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியனாகியுள்ளது. தற்போது இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
NZ vs SA: குயீண்டன் டி காக், வான் டெர் டூசென் அதிரடி வேட்டை – தென் ஆப்பிரிக்கா 357 ரன்கள் குவிப்பு!
அதன் பிறகு நடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இதையடுத்து வரும் 4 ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 36ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். இதன் மூலமாக ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு மேலும் பிரகாசமாகும்.
இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் இந்தப் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் பயிற்சியை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா வீரர்கள் ஹோட்டல் அறையிலிருந்து கோல்ஃப் விளையாட சென்றதாக கூறப்படுகிறது.
விளையாடி முடித்த பிறகு ஆஸ்திரேலியா வீரர்கள் கோல்ஃப் வண்டியில் ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிளென் மேக்ஸ்வெல் வண்டியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்பட்டுகிறது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
இதில், அவர் மூளையதிர்வு அடைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட் கூறியிருப்பதாவது: கிளப் ஹவுஸிலிருந்து அணியின் பேருந்துக்கு திரும்ப செல்வதற்கு மைதானத்திலிருந்து கோல்ஃப் வண்டியின் பின்புறத்தில் பயணித்துள்ளார்.
அப்போது அவர் வண்டியிலிருந்து தவறி விழுந்ததில் மூளையதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அடுத்த சில நாட்களுக்கு சிகிச்சையில் இருப்பார். ஆதலால், இன்னும் 6 முதல் 8 நாட்கள் வரையில் கிளென் மேக்ஸ்வெல் சிகிச்சை பெறும் நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
New Zealand vs South Africa: டிம் சவுதியை களமிறக்கிய நியூசிலாந்து – டாஸ் வென்று பவுலிங்!