NZ vs SA: குயீண்டன் டி காக், வான் டெர் டூசென் அதிரடி வேட்டை – தென் ஆப்பிரிக்கா 357 ரன்கள் குவிப்பு!
நியூசிலாந்திற்கு எதிரான 32 ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் மற்றும் வான் டெர் டூசென் ஆகியோரது அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 357 ரன்கள் குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 32ஆவது லீக் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெம்பா பவுமா மற்றும் குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பம் முதலே டி காக் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். பவுமா 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு டி காக் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டூசென் இருவரும் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். டி காக் 62 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதே போன்று வான் டெர் டூசென் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதையடுத்து இருவரும் விக்கெட் விழாமல் ரன்கள் சேர்த்தனர். டி காக் மற்றும் வான் டெர் டூசென் ஆகியோர் கொடுத்த அழகான ரன் அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்புகளை நியூசிலாந்து வீரர்கள் கோட்டைவிட்டனர்.
இதன் காரணமாக இருவரும் சதம் அடித்தனர். டி காக், 103 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் 4ஆவது முறையாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை சதம் அடித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா 4 (2015) சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
New Zealand vs South Africa: டிம் சவுதியை களமிறக்கிய நியூசிலாந்து – டாஸ் வென்று பவுலிங்!
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 21ஆவது முறையாக சதம் அடித்துள்ளார். டிவிலியர்ஸ் 25 சதங்களும், ஹசீம் ஆம்லா 27 சதங்களும் அடித்துள்ளனர். இதையடுத்து இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தது ஆட்டமிழந்தது. டி காக் 116 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 116 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மும்பை காற்று மாசுபாடு: உலகக் கோப்பை போட்டியில் பட்டாசு வெடிக்க தடை – ஜெய்ஷா உறுதி!
இவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். இதற்கிடையில் வான் டெர் டூசென் தன் பங்கிற்கு 2ஆவது சதம் அடித்துள்ளார். அவர், 102 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். அதன் பிறகு சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதில், வான் டெர் டுசென் 118 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹென்ரி கிளாசென் களமிறங்கினார். டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர், 2 பவுண்டரி, 4 சிக்ஸரும் விளாசியுள்ளார். கடைசியாக வந்த ஐடன் மார்க்ரம் சிக்ஸர் அடித்து முடிக்கவே, தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் டிம் சவுதி 2 விக்கெட்டும், ஜிம்மி நீசம் ஒரு விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
- Aiden Markram
- CWC 2023
- Daryl Mitchell
- David Miller
- Devon Conway
- Heinrich Klaasen
- Kagiso Rabada
- Keshav Maharaj
- Marco Jansen
- Mitchell Santner
- NZ vs SA
- NZ vs SA World Cup Match
- New Zealand
- New Zealand vs South Africa
- New Zealand vs South Africa Cricket World Cup
- New Zealand vs South Africa Live Streaming
- Pune Stadium
- Quinton de Kock
- Rachin Ravindra
- South Africa
- Temba Bavuma
- Tim Southee
- Tom Latham
- Watch NZ vs SA Live Score
- Will Young
- World Cup NZ vs SA Venue