ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து!
சீனாவின் ஹாங்சோவில் நடந்த 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர் மற்றும் வீராங்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாரா ஏசியாட் எனப்படும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய பாராலிம்பிக் குழுவால் உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக ஹாங்சோவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
33 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த டேவிட் வில்லி – கடைசி உலகக் கோப்பையில் 3 போட்டிகள்!
இதில், 41 நாடுகளைச் சேர்ந்த 2405 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 19 விளையாட்டுகளை கொண்ட இந்த ஆசிய விளையாட்டு போட்டியானது 341 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் என்று மொத்தமாக 65 பதக்கங்களை வென்றது.
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்சியானில் 2ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என்று மொத்தமாக 57 பதக்கங்களை கைப்பற்றியது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது.
New Zealand vs South Africa: டிம் சவுதியை களமிறக்கிய நியூசிலாந்து – டாஸ் வென்று பவுலிங்!
இந்த நிலையில் தான் சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், 44 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 போட்டிகள் கொண்ட இந்த விளையாட்டில் மொத்தமாக 501 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் 28ஆம் தேதி வரையில் நடந்தது. இந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
மும்பை காற்று மாசுபாடு: உலகக் கோப்பை போட்டியில் பட்டாசு வெடிக்க தடை – ஜெய்ஷா உறுதி!
இந்த நிலையில் தான் இந்த பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா துப்பாக்கி சுடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், படகுப் போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், பளூதூக்குதல், தடகளப் போட்டி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் என்று பல பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்த 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் முறையாக 100க்கும் அதிகமான பதக்கங்களை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தியா 29 தங்கம் 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் நீளம் தாண்டுதலில் தங்கமும், துளசிமதி முருகேசன் பேட்மிண்டன் பிரிவில் தங்கமும் வென்றுள்ளனர். வட்டு எறிதல் போட்டியில் முத்துராஜா வெண்கலப் பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்? இது சாத்தியமா?
தொடர்ந்து 4ஆண்டுகளாக சீனா முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் சீனா 214 தங்கம், 167 வெள்ளி மற்றும் 140 வெண்கலம் என்று மொத்தமாக 521 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று மொத்தமாக 107 பதக்கங்களை வென்று சரித்திர சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில், ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்... ஒரே ஒரு விஷயத்திற்காக நான் உங்களிடையே வந்திருக்கிறேன், அதுவே உங்களை வாழ்த்துவதற்காகவே.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இந்திய விளையாட்டு வீரர்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. அவர்களின் சாதனைகள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறன்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.