Asianet News TamilAsianet News Tamil

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்? இது சாத்தியமா?

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

India and Pakistan are most likely to meet in the 1st semi-final match or 2nd semi-final match of the World Cup 2023? rsk
Author
First Published Nov 1, 2023, 11:44 AM IST | Last Updated Nov 1, 2023, 11:44 AM IST

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம் பெற்றுள்ள 10 அணிகளில் ஒவ்வொரு அணியும் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. நேற்று 7ஆவது போட்டிக்கான 31ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் முதல் அணியாக வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இந்த நிலையில் தான் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் விளையாடிய 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 5ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. இதில் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெறும். இதன் மூலமாக பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு அமையும். அதுவும், டாப் 4 இடங்களைப் பிடித்துள்ள அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து தான் அமையும்.

கிரிக்கெட் வாழ்க்கையை கவுரவிக்கும் வகையில் வான்கடே மைதானத்தில் சச்சினின் முழு உருவ சிலை இன்று திறப்பு!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தில் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் 3 போட்டிகள் உள்ளன். இதில், ஏதேனும் ஒரு அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு அமையும்.

இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகளில் 2 அல்லது 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதில், புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4 ஆவது இடத்தில் உள்ள அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் 2ஆவது அரையிறுதி போட்டியிலும் மோதும்.

PAK vs BAN: தொடர்ந்து 6 தோல்வி: அரையிறுதி வாய்ப்பு போச்சு; முதல் அணியாக பரிதாபமாக வெளியேறிய வங்கதேசம்!

இந்த நிலையில் தான் லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா முதல் இடத்திலும், பாகிஸ்தான் 4ஆவது இடத்திலும் இருந்தால் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு சாத்தியம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios