MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!

IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!

பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான பிட்ச்சிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் தனது புயல்வேக பேட்டிங்கின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 15 2026, 11:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இஷான் கிஷன் ஆட்டநாயகன்
Image Credit : X@BCCI

இஷான் கிஷன் ஆட்டநாயகன்

டி20 உலகக் கோப்பையில் கொழும்புவில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. நமது அணியில் மேட்ச் வின்னராக ஜொலித்த இஷான் கிஷன் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 77 ரன்கள் விளாசினார். 

பின்பு ஆட்டம் முடிந்து ஆட்டநாயகன் விருது வென்ற இஷான் கிஷன் ''இந்த ஆடுகளம் அவ்வளவு எளிதாக இல்லை. சில நேரங்களில், உங்கள் பலத்தை நம்பி கவனம் செலுத்த வேண்டும். நான் பந்தை கவனித்து, எனது பலத்தில் உறுதியாக இருந்து, முடிந்தவரை ரன்களை ஓடினேன்" என்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இஷான் பிளான் இதுதான்
Image Credit : X@BCCI

இஷான் பிளான் இதுதான்

பந்துவீச்சாளர்களின் லைன்களை சிறப்பாகக் கட்டுப்படுத்த, தனது ஆஃப்சைடு ஆட்டத்தை மேம்படுத்துவதில் தான் செய்துள்ள கடின உழைப்பை அவர் எடுத்துரைத்தார். "எனது ஆஃப்சைடு ஆட்டத்தில் நான் நிறைய உழைத்தேன், அதனால் அவர்கள் நான் விரும்பும் இடத்தில் பந்துவீசும்படி செய்யலாம்" ஒரு பெரிய மைதானத்தில், பிளேஸ்மென்ட்டின் மதிப்பை கிஷன் வலியுறுத்தினார்.

"ஒரு பெரிய மைதானத்தில், உங்களுக்கு பெரிய இடைவெளிகள் கிடைக்கும். இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிக்க முயற்சித்தேன், இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தேன். 160-170 போன்ற ஒரு ஸ்கோரை நாங்கள் அமைக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அது எங்களுக்கு ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

எங்கள் நாட்டுக்கு சிறப்புமிகுந்த தருணம்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒரு சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்ட கிஷன், "இந்தியா-பாகிஸ்தான், எங்களுக்கு மட்டுமல்ல. எங்கள் நாட்டிற்கும் எப்போதும் ஒரு சிறப்பு வாய்ந்த விளையாட்டு. அவர்களிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்த வெற்றியைப் பெறுவது, முன்னோக்கிச் செல்ல எங்களுக்கு நம்பிக்கையைத் தரும்" என்றார்.

Related Articles

Related image1
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
33
பும்ரா, பாண்யாவுக்கு பாராட்டு
Image Credit : X@bcci

பும்ரா, பாண்யாவுக்கு பாராட்டு

மேலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கும் இஷான் கிஷன் சிறப்புப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். "அவர்கள் அபாரமாக பந்து வீசினர். நான் பேட்டிங் செய்யும்போது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் பெரிதாக உதவுவது போல் உணரவில்லை. 

ஜஸ்ஸி (பும்ரா) புதிய பந்திலோ அல்லது டெத் ஓவர்களிலோ எப்படி பந்து வீசுவார் என்பது எங்களுக்குத் தெரியும். சரியான இடங்களில் பந்து வீசி, தனது திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக ஹர்திக்கிற்குப் பாராட்டுகள்" என்று கிஷன் மேலும் கூறினார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Related Stories
Recommended image1
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Recommended image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved