Gautam Gambhir: 2024 ஐபிஎல்லுக்கு முன்னதாக லக்னோ அணியை விட்டு விலக தயாரான கௌதம் காம்பீர்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக உள்ள கௌதம் காம்பீர் வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியை விட்டு விலக தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் இந்த தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது. இந்த அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார். அணியில் ஆலோசகராக கௌதம் காம்பீர் இருந்தார்.
இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், காம்பீர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் ஸ்ட்ரேடெஜி ஆலோசகராக பிசிசிஐயின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தான் காம்பீர் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!
அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கௌதம் காம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அமெரிக்காவில் யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் தொடர் இன்று முதல் நடக்கிறது. இதற்காக அமெரிக்காவில் இருக்கும் கௌதம் காம்பீர் நியூ ஜெர்சி லெஜண்ட்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடுகிறார். இந்த தொடரானது வரும் 27 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
Asia Cup 2023: உலகக் கோப்பை கனவு முடிந்தது: ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கப்படலாம்!