விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!
உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீரர் ஆர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக் கோப்பை தொடரானது வரும் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் மட்டும் அபிமன்யு புராணிக், எஸ்.எல்.நாராயணன், அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜராத்தி, குகேஷ் டி, அதீபன் பாஸ்கரன், கார்த்திக் வெங்கட்ராமண் ஆகியோர் உள்பட 206 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.
உலகக் கோப்பை செஸ் தொடரின் கால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி மற்றும் தமிழக வீரர் ஆர் பிரக்ஞானந்தா மோதினர். இதில், பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதுமட்டுமின்றி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் உலகின் 3ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணா மற்றும் பிரக்ஞானந்தா மோதுகின்றனர். இன்று எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. நாளை முதல் 24 ஆம் தேதி வரையில் கடைசி ரவுண்ட் போட்டிகள் நடைபெறுகிறது.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!