IRE vs IND 1st T20:அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் யாருக்கு வாய்ப்பு? டீம் எப்படி அமையும்?

இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Who has a chance in the first T20 against Ireland? How will the team be formed?

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டப்ளின் மைதானத்தில் நடக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), முகேஷ் குமார், ஆவேஷ் கான், ஜித்தேஷ் சர்மா, பிரஷித் கிருஷ்ணா மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

IRE vs IND: இதுவரையில் இந்தியா – அயர்லாந்து நேருக்கு நேர் போட்டிகள்: யாருக்கு வாய்ப்பு?

இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்த்தால், ஓபனிங் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. மூன்றாவதாக சஞ்சு சாம்சன் களமிறங்கலாம். அடுத்து திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பிளேயிங் 11:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.

அயர்லாந்து பிளேயிங் 11:

ஆண்ட்ரூ பல்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்

World Cup 2023: உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியான தேர்வு – ரவி சாஸ்திரி!

ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான், ஷாபாஸ் அகமது, பிரஷித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று அயர்லாந்து அணியைப் பொறுத்த வரையில், ஆண்ட்ரூ பல்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ireland vs India: 1st T20: முதல் முறையாக கேப்டனான ஜஸ்ப்ரித் பும்ரா: இன்று இந்தியா – அயர்லாந்து பலப்பரீட்சை!

இதுவரையில், இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து அணி 221 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை ஜியோ சினிமா மற்றும் Viacom18 க்கு சொந்தமான ஸ்போர்ட்ஸ் 18 இல் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கலாம்.

World Athletics: உலக தடகள துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அடில்லே ஜே சுமாரிவாலா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios