கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? அப்போ புரியல, இப்போ புரியுது – விரேந்திர சேவாக்!
கட்டப்பா ஏன் பாகுபலியைக் ஒன்றார் என்று ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகு தான் தனக்கு புரிவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சயீப் அலி கான், கீர்த்தி சனோனி, சன்னி சிங், சோனல் சௌகான், வட்சல் சேத், தேஜஸ்வினி பண்டிட் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் ஆதிபுருஷ். முழுக்க முழுக்க வரலாற்று கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இதில், ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோனி ஆகியோர் நடித்திருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகும் ஐபிஎல் ஸ்டார் ரிங்கு சிங்?
ராமாயணக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்பதால், படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றனர். ஆனால், கடைசியாக ஏமாற்றமே மிஞ்சியது. கிராஃபிக்ஸ் மற்றும் கார்ட்டூன் அதாவது பொம்மை படம் போன்று இருந்ததால் ரசிகர்கள் விரக்தியோடு திரும்பி வந்தனர். ரசிகர்கள் வராததால், திரையரங்கில் ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்த கோவை; கடைசி இடத்தில் பா11சி திருச்சி!
கிட்டத்தட்ட ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் இதுவரையில் ரூ.410 கோடி வரையில் மட்டுமே வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் இந்தப் படம் விரைவில் திரையரங்கிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த மண்ணில் விக்கெட் எடுத்த நடராஜன்; முதல் முறையாக நேரில் பார்த்து ரசித்த நட்டு ஃபேமிலி!
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விரேந்திர சேவாக், இந்தப் படத்தை கலாய்த்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கட்டப்பா ஏன் கொன்றார் என்று ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகு தான் தனக்கு புரிகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா, ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்பதற்கான காரணம் தெரியாது. பாகுபலி 2 படத்தில் தான் அதற்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.